search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரம் பிரபு"

    மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. #Maniratnam
    இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 - வது படைப்பாக "வானம் கொட்டட்டும்" என்ற புதிய படம் உருவாக இருக்கிறது.

    இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.

     

    மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். "96" புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. 
    மணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh
    மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

    இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.



    படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh

    சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றியை நடிகர் விக்ரம் பிரபு படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார். #VikramPrabhu
    கலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ‘தூப்பாக்கி முனை’. இப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த 25-வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். 



    மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
    துப்பாக்கி முனை படம் வெற்றி அடைந்த உற்சாகத்தில் விக்ரம் பிரபு அளித்த பேட்டி:

    இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்தது எப்படி?

    இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன்.

    பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

    அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.



    எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?

    பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.

    சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

    யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும். #ThuppakkiMunai #VikramPrabhu

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
    நாயகன் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 30 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறார். என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிரை கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். விக்ரம் பிரபுவோ அம்மா மீது பாசமாக இருந்தாலும், செய்யும் தொழிலை மிகவும் நேசித்து வருகிறார்.

    இந்நிலையில், ஹன்சிகாவை பார்க்கும் விக்ரம் பிரபு அவர் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பழகி வரும் நிலையில், போலீஸ் வேலையால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். அதே சமயம், தன்னுடைய வேலையில் இருந்து விக்ரம் பிரபு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.



    சில நாட்களில் ராமேஸ்வரம் பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் 14 வயது மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது.

    இதை விசாரிப்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் இவர், எம்.எஸ்.பாஸ்கர் மூலம், என்கவுண்டர் செய்ய இருக்கும் நபரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இதில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.



    இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் ஸ்டைலிஷ் உடைகளில் வந்து கவர்கிறார்.



    கதாநாயகி ஹன்சிகா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தேவையில்லாத காட்சிகள் என்று இல்லாமல் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதை படத்தில் உணர்த்தியிருக்கிறார். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்னளை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.



    முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘துப்பாக்கி முனை’ ஷார்ப். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம். #ThuppakkiMunai #VikramPrabhu
    வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் `துப்பாக்கி முனை’.

    விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு - ராசாமாதி, கலை - மாயபாண்டி, படத்தொகுப்பு - புவன் ஸ்ரீனிவாஸ், பாடல்கள் - புலவர் புதுமைப்பித்தன், பா. விஜய், சண்டைபயிற்சி - அன்பறிவ், தயாரிப்பாளர் - கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு - வி கிரியேஷான்ஸ்,  இயக்கம் - தினேஷ் செல்வராஜ்.



    படம் பற்றி இயக்குநர் கூறும் போது,

    படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu #Hansika

    96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகர் சங்கம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து எஸ்.நந்தகோபால் விளக்கம் அளித்துள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil
    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தை தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர் தனது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் விஷால் நடித்த கத்தி சண்டை, விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

    இந்த படங்களில் நடித்துள்ள விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்து இருப்பதாகவும், இனிமேல் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகர்-நடிகைகள் நடிக்க கூடாது என்றும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.

    இந்த நிலையில், அதற்கு பதில் அளித்து நந்தகோபால் கூறியதாவது,

    கத்தி சண்டை படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மனசாட்சிபடி செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு ஊதியத்தையும் வழங்கி விட்டேன்.



    இந்த நிலையில் எனது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் நடிகர் சங்க நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. எனக்கு எதிரான இந்த அறிக்கையை சிலர் வேண்டுமென்றே அனுப்பி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) உரிய முடிவை எடுக்க வேண்டும். அதற்கு கட்டுப்படுவேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் தொழில் செய்ய விடாமல் என்னை தடுப்பதாக டெல்லியில் உள்ள இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் புகார் செய்வேன்.

    இவ்வாறு கூறியுள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil #SNanadgopal

    விஜய் சேதுபதியின் 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. #96TheMovie #MadrasEnterprises
    விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஷால் நடித்த கத்தி சண்டை, துப்பறிவாளன், விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி, விஜய் சேதுபதியின் 96 உள்ளிட்ட படங்களை எஸ்.நந்தகோபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த படங்களில் நடித்த, நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களான நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதால் சங்க உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
    இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    விஷாலின் துப்பறிவாளன், விக்ரம்பிரபுவின் வீரசிவாஜி படங்களில் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் 96 என்ற திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதியின் ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.

    மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.



    படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில், நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்த நற்செயலை சில தயாரிப்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டு, நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாகி வருகிறது.

    கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.

    அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. 

    அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும், திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #MadrasEnterprises

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் `துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. #ThuppakkiMunai #VikramPrabhu
    ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’. 

    சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

    60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

    வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார். #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu

    சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு, சிவாஜியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். #VikramPrabhu #Sivaji
    60 வயது மாநிறம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடிக்கும் படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். பொதுவாகவே வாரிசாக சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு சினிமாவில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

    சிவாஜி குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு அதிகமாகவே இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 



    ஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கும் ‘தங்கப்பதக்கம்‘ படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. சிவாஜியோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற’ என்று கூறி இருக்கிறார்.
    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் `துப்பாக்கி முனை’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu
    ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 

    60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 



    துப்பாக்கி சத்தமும், தோட்டாக்களும் டீசர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தப் படத்தின் டீசரை, விக்ரம் பிரபு ரசிகர்கள், சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த டீசரை சுமார் 9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu

    அன்பரசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு வால்டர் என்று தலைப்பு வைத்துள்ளனர். அர்ஜுன், ஜாக்கி ஷெராப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். #Walter #VikramPrabhu
    அர்ஜுன், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கும் படத்தின் தலைப்பு, படத்தின் கதாநாயகன் பெயரை இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி அறிவிப்பார் என கூறி இருந்தார்கள்.

    அதன்படி லிங்குசாமி அந்த படத்தின் தலைப்பு வால்டர் என்றும் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு என்றும் அறிவித்தார்.

    அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை', 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். கிருஷ்ணா, பிந்துமாதவி நடிப்பில் உருவாகும் ‘கழுகு-2’ படத்துக்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Walter #VikramPrabhu

    ×